தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே.!
மரணத்தின் கற்பப்பையில்
கலைந்து போனவனே
நீ செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்…
.......
ஊயிர் என்பது
ஊருதுளி விந்தின்
புpரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
.......
பூமியைக்
கைவிடப்பாப்பவனே
பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா
காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது நிறுத்திக்கொண்டதா?
பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?
தன் சிகரங்களில் வநிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.
நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோன்டுகிறாய்?
…….
அதோ பார்
அபாயம் அறிந்தால்
அங்கலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஏன்?
பறவாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?
மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?
வலையறுந்த நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்.
…….
தம்பீ
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்.
-வைரமுத்து (1989)
***** ***** ***** *** ***** ***** *****
ni rasikka tharichaval diiiiiii
நீ செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்…