காதல் !
இதய ரோஜாச் செடியில்
இந்த
ஓற்றைப் பூப் பூத்துவிட்டால்
ஆத்தனை முட்களும்
ஊதிர்ந்து போகின்றன
வாலிபம் ஏந்திப்பார்க்கும்
திருவோடும் இதுதான்
வாலிபம் சூட்டிப்பார்க்கும்
கிரீடமும் இதுதான்
...............
முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை
இப்போதோ –
மௌனத்திற்கு கூட
உரையெழுத முடிகிறது
காதல்
காதுகுடைந்து போட்ட
கோழிஇறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
...............
இலக்கிய வாசலில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்
சமூக வாசல்களில்
எச்சிலால் அல்லவா
அர்ச்சிடப்படுகிறது?
அமராவதிகளும், அனார்கலிகளும்
லைலாக்களும், தேவதாஸ்களும்
காதல் பிச்சை
கேட்டு கேட்டு…
மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்
-வைரமுத்து (1977)
(நான் காதலுக்காக வழக்காடுகிறேன் - கவிதையில் எனக்குப் பிடித்த சிலபகுதிகள்..)